சுகாதாரத் துறையின் மூலம் பள்ளிக் குழந்தைகளின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை மையமாக கொண்டு, மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.

பள்ளி சுகாதார திட்டத்தில் கீழ்க்கண்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன:-

  • இரத்தசோகை, பொது சுகாதாரம் மற்றும் இதர சுகாதார பிரச்சனைகளை பரிசோதித்தல் - சுகாதார பராமரிப்பு மற்றும் தொடர் சிகிச்சைக்கான பரிந்துரை
  • நோய் எதிர்ப்பு, கண் மற்றும் பல் பரிசோதனை
  • இரும்பு சத்துடன் கூடிய போலிக் அமில (ஐகுஹ) மாத்திரைகள் வழங்குதல்
  • குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குதல்
  • அனைத்து குழந்தைகளுக்கும் சுகாதார அட்டைகளைப் பராமரித்தல்.